Advertisement
BalaramanL

தண்டவாளம் பற்றிய வண்டவாளம்!

Jul 11th, 2012
65
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 3.36 KB | None | 0 0
  1. பேசுபுக்கில் ஒரு நண்பர் பகிர்ந்த தகவல்!
  2.  
  3. இந்தியாவில் ரயில்வே துறை 1853-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு 23 ஆண்டுகள் கழித்துத்தான் சீனாவில் ரயில் ஓட ஆரம்பித்தது. 1947-ல் இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது, நாடு முழுவதும் 53,396 கி.மீ. நீளத்துக்கு ரயில் பாதை அமைத்திருந்தார்கள். சீன ரயில்வே துறை 27,000 கி.மீ. ரயில் பாதையுடன் அப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்தது. இப்போது சீனாவில், ஒரு லட்சம் கி.மீ. நீளத்தைத் தாண்டி நகரங்கள், கிராமங்கள் என தேசம் முழுவதும் படர்ந்து கிடக்கின்றன ரயில் பாதைகள். இந்திய எல்லையில், நினைத்தால் சில நாட்களுக்குள் லட்சம் துருப்புகளைக் குவிக்கும் அளவுக்கு ரயில் பாதைகளை அமைத்திருக்கிறது சீனா. ஆனால், இப்போது இந்திய ரயில் பாதையின் நீளம் எவ்வளவு தெரியுமா? 64,000 கி.மீ. அதாவது, சுதந்திரம் அடைந்து இந்த 64 ஆண்டுகளில் 10,604 கி.மீ. ரயில் பாதையைத்தான் புதிதாக அமைக்க முடிந்திருக்கிறது. ரயில் பாதைகளை அமைப்பதில் மட்டும் அல்ல. எல்லாவற்றிலுமே நம்முடைய ரயில்வே துறை பின்தங்கித்தான் நிற்கிறது. இறக்குமதி டீசலை நம்பி இருக்க முடியாது; இந்திய ரயில் பாதைகளை எவ்வளவு சீக்கிரம் மின்மயமாக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும் என்பது நேரு காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. ஆனால், நான்கில் ஒரு பகுதி பாதையைத்தான் இதுவரை மின்மயமாக்கி இருக்கிறோம். சென்னை - விழுப்புரம் ரயில் பாதை மின்மயமாகி 50 ஆண்டுகள் கழித்துதான் விழுப்புரம் - திருச்சி பாதையை மின்மயமாக்க முடிந்திருக்கிறது. :(
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement