Advertisement
vijeeth

தேவர்மகன்

Apr 1st, 2015
301
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 4.74 KB | None | 0 0
  1. போற்றிப்பாடடி பெண்ணே பாடலில் வரும் சில வரிகள் -
  2.  
  3. "நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதை
  4. மானமிழந்தாலே வாழத்தெரியாதே
  5. பெருசெல்லாம் சொன்னாங்க
  6. சொன்னபடி நின்னாங்க"
  7.  
  8. அதாவது, நிலச்சுவாந்தார், நிலப்பிரபு மனப்பான்மை உடைய பெரியத்தேவர், மேற்சொன்ன வரிகளின் பிரகாரம் வாழ்ந்துவருபவர். அதனாலேயே, பஞ்சாயத்தில் மாயன் பேசுவதை கேட்டு மானம் குலைந்ததாக எண்ணி உயிரை விடுகிறார். "என்னப்பு புரியாம பேசுற? வெக்கம் மானம் சூடு சொரணை இதெல்லாம் இருந்தா கோவம் வரத்தானே செய்யும்? அதெல்லாம் தான் அந்த சின்னப்பய(மாயன்0 புடுங்கிப்ட்டானே?!"
  9.  
  10. ஆக, அவரே வகுத்துக்கொண்ட கோட்பாடு, அதன்படி மட்டுமே வாழமுடியும் இல்லையென்றால் உயிர் போகும். பெருசு சொன்னாரு, சொன்னபடி நின்னாரு, அதாவது செத்தாரு.
  11.  
  12. இதை அப்படியே பெரியத்தேவரின் மகன் சக்திவேலுக்கு எஸ்க்டென்ட் செய்யமுடியாது. அதற்காக சக்திவேல், மானம் மரியாதை இல்லாதவன் என்றில்லை. அவனுக்கும் கோபம் வரும், அந்த பஞ்சாயத்திலேயே வந்தது (அதை அவன் அப்பா அடக்குகிறார்) ஆனால் அவன் ஜாதிக்கும் இன குல பெருமைக்கும் முக்கியத்துவம் தருபவனல்ல. மனிதர்களுக்கும் அவர்களின் அமைதியான நேர்மையான வாழ்க்கைக்கு மட்டுமே. எனவே தான் மாயன், சக்திவேலைப்பார்த்து சவால்விடும்போது, தேவனா இருக்குறதைவிட மனுஷனா இருக்குறது முக்கியம் என்றான்.
  13.  
  14. சக்திவேல் சிறைக்கு செல்லாமல் இருந்தால், நிச்சயம் இந்த ஊரைவிட்டுவிட்டு, சென்னை அல்லது பெருநகரங்களுக்கு சென்று தன் கனவை (chain of restaurants) நிறைவேற்றவே எத்தனித்திருப்பான். ஜாதி அதுசார்ந்த பெருமை எல்லாம் அற்றவனாகவே வாழ்ந்திருப்பான்!
  15.  
  16. எனவே, இந்த போற்றிப்பாடடி பெண்ணே பாடல், இந்த அர்த்தத்தில் கொள்ளவேண்டும். காரணகாரிமன்றி, ஆதிக்கசாதியினர் அதை பயன்படுத்துவது கமல் செய்த தவறு என்றே தொடர்ந்து தாக்கப்படுகிறார்.
  17.  
  18. பின், விருமாண்டியும் வருகிறது! அதில் இப்பேர்ப்பட்ட வரிகள் பாடலிலோ படத்திலோ இல்லை. ஆனாலும் கமலை மட்டும் நொள்ளை சொல்வதை சிலர் விடுவதாயில்லை....
  19.  
  20. நல்லவழி நீ தான், சொல்லி என்ன லாபம்?
  21. சொன்னவனைத்தானே சூழ்ந்ததின்று பாவம்!
  22.  
  23. கலங்காதே ராசா! காலம் வரட்டும்
  24. நள்ளிரவு போனபின்பு வெள்ளி முளைக்கும்!!!
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement