Advertisement
Guest User

Untitled

a guest
May 7th, 2013
75
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 11.76 KB | None | 0 0
  1.  
  2. முஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்!- சொல்கிறார் கொழும்பு அசாத் சாலி
  3. [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 06:50.42 AM GMT ] [ விகடன் ]
  4. இலங்கையில் தமிழின அழிப்பை நடத்திய ராஜபக்ச அரசு, இப்போது தமிழ் முஸ்லிம்கள் மீது இனத் துவேசத்தைக் காட்டி வருகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர் இலங்கை தேசிய ஐக்கிய முன்னணிக் கட்சி​யின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான எம்.அசாத் சாலி.
  5.  
  6. சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் ஓப் இந்தியா நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கில் பங்கேற்க வந்தவரைச் சந்தித்தோம்.
  7.  
  8. கே: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் வருகிறதே?
  9.  
  10. ப: இலங்கையில் முதல் தாக்குதலே முஸ்லிம்கள் மீதுதான். 1915-களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.
  11.  
  12. இப்போது புலிகளுடனான யுத்தத்துக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள ஒரு தர்காவை போலீஸார் முன்னிலையில் பௌத்த பிக்குகள் உடைத்தனர்.
  13.  
  14. 2012-ல் தம்புள்ள எனும் இடத்தில் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டது. இப்போது 10-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களையும் மதரஸாக்களையும் சிங்களவர்கள் உடைத்துள்ளதன் மூலம் தமிழ் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை வெளிப்படையாகவே தொடங்கிவிட்டனர்.
  15.  
  16. பர்தா அணிந்து செல்லும் இஸ்லாமியப் பெண்களிடம் அத்துமீறி நடக்கிறார்கள். இராணுவத்தினர் இதைக் கண்டுகொள்வது இல்லை.
  17.  
  18. 1915-ல் நடந்ததுபோன்ற யுத்தம் இப்போதும் நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று, ராஜபக்ச ஆதரவு சிங்களக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயா கூறியுள்ளதன் மூலம் அவர்களின் எண்ணத்தை அறியலாம்.
  19.  
  20. இந்த யுத்தத்துக்கான ஓர் ஆரம்பமாக இலங்கையில் ஹலால் சான்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களைத் தள்ளிக்கொண்டே போனால், ஒரு கட்டத்தில் நாங்களும் திரும்ப வேண்டியிருக்கும்.
  21.  
  22. அப்போது ஆயுதங்களைத் தூக்குவதைத் தவிர வேறுவழி இல்லை. இதைச் சொன்னதற்காக என்னைக் கைது செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா என்னும் பௌத்த அமைப்பு கூறியிருக்கிறது.
  23.  
  24. கே: முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
  25.  
  26. ப: இலங்கை மீது அமெரிக்கா தீர்மானம் கொண்டு ​வந்த போது அதில் இலங்கையின் தமிழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரி சர்வதேச சபைக்கு மனு கொடுத்துள்ளேன்.
  27.  
  28. மேலும் இலங்கைக்கு ஆதர​வாக செயல்பட்ட எட்டு முஸ்லிம் நாடுகள் உட்பட 24 நாடுகளின் தூதர்களைச் சந்தித்தும் சிறுபான்மை​யினர் பாதுகாப்புக்காக சர்வதேச சபையில் பேசக் கோரியுள்ளோம்.
  29.  
  30. இந்த விவகாரத்தை உலக சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முயல்கிறோம்.
  31.  
  32. கே: தமிழர்களும் முஸ்லிம்களும் வேறுபட்டு இருப்பதாக முன்பு தகவல் வந்தது. இப்போது நிலைமை எப்படி உள்ளது?
  33.  
  34. ப: புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து முன்பு முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். அதில் இருந்து முஸ்லிம் அமைப்புகள் வேறுபட ஆரம்பித்​தன. புலிகள் அப்படிச் செய்திருக்கக் கூடாது. முஸ்லிம்​களை அவர்கள் அரவணைத்து இருந்தால், நிலைமை வேறு மாதிரியாகி இருக்கும். சில வாய்ப்புகளை பிரபாகரன் தவறவிட்டுவிட்டார். அது, ராஜபக்சவின் குடும்பத்துக்குத்தான் பயனளித்தது!
  35.  
  36. கே: ராஜபக்சவின் செயல்பாடுகள்..?
  37.  
  38. ப: புலிகளை வென்று விட்டோம் என்பதே அவரது பிரகடனமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாத ராஜபக்ச குடும்பம் இன்று ஆசியாவிலேயே வசதி​யான குடும்பமாக மாறி இருக்கிறது.
  39.  
  40. வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டிலும் பெட்ரோல் பங்குகளில் வேலைசெய்து கொண்டிருந்த அவரது உறவுகள் இன்று மந்திரிகளாகி விட்டனர்.
  41.  
  42. அயல்நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறார்கள். ஊடகங்களைக் கைப்பற்றி விட்டனர். இன்றைக்கு இலங்கை​யின் அனைத்து அரசுத் துறைகளின் தலைமைப் பதவிகளிலும் ராஜபக்சவின் குடும்பத்தினர்தான் இருக்கின்றனர்.
  43.  
  44. சிங்கள மக்களுக்கான ஒரே வீரன் ராஜபக்ச​தான் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பொதுபல சேனா என்னும் அமைப்பை வழி நடத்துகிறார் கோத்தபாய.
  45.  
  46. ராஜபக்ச சீனியர் பிரசிடென்ட்டாகவும் கோத்தபாய, பசில், நாமல் ஆகியோர் பிரசிடென்ட் எனவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் சொத்துபத்துக்களை அபகரிப்பது நாமல் ராஜபக்சவின் வேலை.
  47.  
  48. அரசின் டெண்டர்களை எடுத்து கமிஷன் பெற்றுக் கொள்வது பசில் ராஜபக்ச வேலை. இலங்கையைப் பௌத்த நாடாக மாற்றுவது கோத்​தபாய ராஜ​பக்ச​வின் வேலை எனப் பங்குபோட்டுக் ​கொண்டு செயல்படுகிறார்கள்.
  49.  
  50. இந்தத் துணிச்சலில்தான் இலங்கையில் ஒரே நபர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பொறுப்பு வகிக்க முடியும் என்பதை மாற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரலாம் என்னும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
  51.  
  52. நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஆனால், மூன்றாவது வருடத்தின் முடிவிலேயே தேர்தலை நடத்தும் நடவடிக்கையில் ராஜபக்ச இறங்கியுள்ளார்.
  53.  
  54. இப்போது அவரது கட்சி பெரும்பான்மையாக இருப்பதால் மீண்டும் அதிபர் தேர்தலை நடத்தினால் வெற்றி பெற்று கூடவே நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தலாம் என்னும் திட்டத்தில் இருக்கிறார்.
  55.  
  56. ஆனால், தமிழர்களும் முஸ்லிம்களும் ராஜபக்சவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். இந்த இரண்டு சமூகங்களின் நம்பிக்கையை அவரால் பெறவே முடியாது!
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement