Advertisement
vijeeth

Papanasam Logic

Jul 5th, 2015
196
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 17.95 KB | None | 0 0
  1. திருப்பார்த்ரிஷ்யம் - பாபநாசம் - மைய்யக்கரு பற்றிய நீண்ட பார்வைகள்
  2.  
  3. த்ரிஷ்யமே சுமார் தான்
  4. என்ன இருந்தாலும் ஒரு கொலையை பக்காவா மறைக்குற ஒரு படத்துக்கு இவ்ளோ ஆதரவா?
  5. சுயம்புலிங்கமே கேபிள் டிவியில் மிட்நைட் மசாலா பாக்குறார்
  6.  
  7.  
  8. என்கிற ரீதியில் சிலர் கருத்து சொல்கின்றனர். த்ரிஷ்யம் ஒரு திரைப்படம் தானே?! சுவாரசியமான குடும்ப த்ரில்லர் திரைப்படம் மட்டும் தானே?! இதற்கு ஏன் இப்படியெல்லாம் பொங்குகின்றனர்? இதற்கு முன்னர் குடும்ப த்ரில்லர்கள் வரவில்லையா? அல்லது, வழக்கமான மசாலா படங்களில் இல்லாத லாஜிக் குற்றங்களா?!
  9.  
  10. ஆனால், த்ரிஷ்யம் பாபநாசத்தை இப்படி குறை சொல்வதில் ஒரு லாஜிக்கல் பாயிண்ட் உண்டு தான்! சூது கவ்வும் மும் ஒரு வெற்றிப்படம் தான் த்ரிஷ்யமும் ஒரு வெற்றிப்படம் தான்! ஆனால் யாரும், சூது கவ்வும் பார்த்துவிட்டு, ஒரு அரசியல்வாதியின் (கார்னர் செய்யப்பட்ட) அப்பாவி மகன் இப்படித்தான் திட்டம் தீட்டி வெற்றி பெருவான் என்றோ, ஒரு கடத்தல்காரன் இப்படித்தான் நேர்மையாக(?) நடந்துகொள்ளவேண்டும் என்றோ யாரும் சொல்லவில்லை! ஆனால் த்ரிஷ்யம் ஒரு குடும்ப்படமாக அமைந்துவிட்டதாலும், யதார்த்தம் அதிகம் உள்ள படமானதாலும், இதை பார்க்கும் பலரும்,
  11. 1) "ஒரு குடும்பம் இதுபோன்ற சிக்கலுக்கு ஆளானால் எப்படி ஒரு தந்தை குடும்பத்தை காப்பாற்ற எந்த அளவுக்கும் போவார் என்பதை இந்தப்படத்தை பார்த்து தான் தெரிந்துகொள்ளவேண்டும்" என்றும்,
  12.  
  13. 2) "பெண்ணைப்பெற்ற ஒவ்வொரு தகப்பனும் கட்டாயம் குடும்பத்துடன் பார்த்தே ஆகவேண்டிய ஒரு படம்"
  14.  
  15. என்றும் பாராட்டை அள்ளித்தெளிக்கின்றனர்!!!! ஆனால் இவை எல்லாம் அந்தப்படத்துக்கு கிடைத்த உச்சபட்ச பாராட்டுக்கள் என்று மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்! நிஜத்தில் த்ரிஷ்யத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்களும் செய்ய முடியாது & செய்யக்கூடாது!
  16.  
  17. நிஜத்தில்....
  18.  
  19. 1) அந்த செல்ஃபோன் வீடியோவைக்காட்டி வருண் மிரட்டியதிலிருந்து இரவு 11(?) மணி வரை நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள், தந்தைக்கே/போலீசுக்கும் தகவல் சொல்லியிருக்கமுடியும். அந்த அறையில் விளக்கு போடுவது, போலீசாகவோ சுயம்புலிங்கமாகவோ இருக்கமுடியும். அவர்கள் இவனை மடக்கிப்பிடித்து ஃபோனையை கையகப்படுத்தி இவனை கைது செய்திருப்பார்கள் அல்லது போலீஸே சீனில் இல்லையெனில், இவனை அடித்து உதைத்து அனுப்பியிருப்பார்கள் அல்லது போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருப்பார்கள்
  20.  
  21. 2) என்னதான் கஞ்சனாக இருந்தாலும் நிச்சயம் வீட்டிலும் கேபிள் டிவி ஆஃபீசிலும் நிச்சயம் ஒரு செல்ஃபொன் வைத்திருப்பார்கள். செல்ஃபோன் இல்லாத பிச்சைக்காரன் கூட லேது!
  22.  
  23. 3) நிஜத்தில், மகள் கொலை செய்துவிட்டிருந்தால், எப்படிப்பார்த்தாலும் தந்தை நிஜத்தில் அந்த பெண்ணின் மேல் அதிக கோபம் மட்டும் தான் கொள்வார். பார்த்து அடித்திருக்கணும், கையில் அல்லது காலில் அடித்திருக்கணு, 2பேரும் சேர்ந்து அவனை மூர்க்கமாக தாக்கி கட்டிப்போட்டிருக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார். ஒரு கொலையை எப்படிப்பார்த்தாலும் ஒரு தந்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் இங்கோ, தந்தை, இதுதான் வாய்ப்பு என, செம ஆர்வத்துடன், தனக்குத்தெரிந்த சினிமாவையெல்லாம் நினைவுபடுத்தி திட்டம் தீட்டி பக்காவாக மறைத்து கிட்டதட்ட ஒரு வீடியோ கேம் ஆடுவது போல் ஈடுபாட்டுடன் கொலையை மறைத்து, இருக்கும் ஆதாரங்களை அழித்து போலி ஆதாரங்களை தயார் செய்து முடிக்கிறார்.
  24.  
  25. 4) அந்த ஐஜி கதைப்படி நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர். அதிகார துஷ்ப்ரயோகம் கூட ஒரு அதிகாரியாக, அந்த எல்லைக்குள் இருந்துகொண்டு மட்டுமே செய்கிறார். நிஜத்தில், நிச்சயம் இப்படி செய்யமாட்டார்கள். ஒன்று, இப்படி குடும்பத்தையே கூப்பிட்டுவைத்து அதுவும் இல்லீகலாக, அடிப்பது, அவருடைய தரப்பை பலவீனம் தான் ஆக்கும் & சுயம்புவின் தரப்பை அனுதாபம் மூலம் பலமாக்கும் என்பது நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்கும். நிஜத்தில், விசாரணை வேறுமாதிரி இருந்திருக்கும். உதா, அவர் வீட்டு பெண், மனைவியை ரகசியமாக கடத்திவைத்துவிட்டு, பதில் சொல்லும்வரை விடமுடியாது என மறைமுகமாக தகவல் சொல்லப்படும். எதுவுமே நேரடியாக இருக்காது. எப்படி சுயம்பு யாருக்கும் தெரியாமல் செய்தாரோ(அல்லது அப்படி இருக்கக்கூடும் என அனுமானம்) அதே போல் அதிகாரி தரப்பும் மறைமுகமாகத்தான் செயல்பட்டு உண்மையை வாங்கப்பார்க்கும்
  26.  
  27. 5) படத்தில் உள்ளதுபோல் ஒருவேளை நிஜத்தில் நடந்தாலும், கதை முடிந்தபின், ஒருநாள் இல்லை ஒருநாள் நிச்சயம் பிணம் கண்டுபிடிக்கப்படும். உண்மையும் கண்டுபிடிக்கப்படும். என்றாவது ஒருநாள் கதையின் நாயகன் கைதாவது உறுதி
  28.  
  29. இதுபோல் இன்னும் நிஜ உலகில் பல விஷயங்கள், படத்தில் காட்டிய விஷயங்களோடு முரண்படலாம். படத்தில் சுயம்புலிங்கம், தன்மேல் எந்தத்தவறும் இல்லை 'போலியாக' அந்த ஊரையே நம்பவைத்ததைவிட, நிஜத்தில், படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் தன்மேல் & தன் குடும்பத்தின் மேல் அனுதாபம் & கமல் என்ற நடிகன் மீது ஆச்சர்யம் & பாராட்டு வரவைப்பதே ஒருவகையில் உண்மையான "த்ரிஷ்யம்" ஆக இருக்கவைக்க முடியும்!
  30.  
  31. மேற்சொன்ன, & அதில் சொல்லாமல் விட்டுப்போன இன்னும் நிறைய லாஜிக் களும் நடைமுறை சாத்தியங்களும், நிஜ உலக யதார்த்தங்களும், "படம் படு சூப்பர்! கமல் நடிப்பு மாஸ்டர் க்ளாஸ்" என அடங்கா சந்தோஷத்துடன் பாராட்டும் ஓவ்வொரு ரசிகனுக்கும் தெரிந்திருக்கும், அல்லது மெல்லியதாக மனதில் நிச்சயம் வந்து போயிருக்கும்!
  32.  
  33. இந்தப்படத்தில் யதார்த்தம் என்பது, ஒரு நிஜத்தில் நடக்கமுடியாத விஷயத்தை possible/சாத்தியம் என நம்பவைத்துவிட்டுத்தான், அதன் முன்னும் பின்னும் யதார்த்தத்தை கொட்டி படம் எடுத்து இருக்கிறார்கள்! நிஜத்தில், ஒரு படத்தில் 100 சதவீதம் யதார்த்தம் என்பது சாத்தியமே இல்லாதது! எல்லா படங்களிலுமே நிச்சயம் சினிமா அனுமதிக்கும் யதார்த்த-மீறல் இருந்தே தீரும்! ஆனாலும், 100% யதார்த்தம் என நம்பவைக்கப்படும் படங்களே மக்கள் மனதில் தங்குகின்றன! உதாரணம், நாயகன் படத்தில் ஒரு ரௌடியின் வாழ்க்கையை முழுவதாக காட்டுவதாக சொல்கின்றனர். அதற்காக 3மணிநேரத்தில் முழுவதாக காட்ட முடியாது! விநாயகர் சதுர்த்தி விழாவை வைத்து, அழகாக, சிலபல வருடங்களை எளிதாக நகர்த்தி இருப்பார்கள்! அந்த இடைப்பட்ட காலத்திலும் நாயகனின் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்திருக்கலாம். ஆனால் படம் என்பது ஒரு மேலோட்ட லேயரை மட்டுமே காட்ட முடியும். மகாநதி படத்திலும் யதார்த்தம் படம் முழுக்க பரவி இருக்கும். அந்த யதார்த்தத்துடன் காட்டப்படும் காட்சிகள் நம்மை மிகவும் அசைத்துப்பார்க்கும். ஆனால் நிஜத்தில், சொத்துக்களை விற்று சென்னைக்கு வரும் ஒரு பெரும் பணக்காரர் நிச்சயம் இவ்வளவு தூரம் எளிதாக ஏமாறுவதற்கான வாய்ப்பு கம்மி. ஆனால் திரைப்படத்தில் அவ்வளவு லாஜிக் பார்த்தால் படமே எடுக்கமுடியாது. ஆனாலும் மக்கள் இந்த த்ரிஷ்யம் / பாபநாசம் படத்தை பொருத்தவரை, யதார்த்தம் மிகுந்ததாக உணர்கிறார்கள்! படத்தின் திரைக்கதை & அனைவரின் நடிப்பினால் மிகவும் கவரப்பட்டு உணர்ச்சிகரமாக மிக சந்தோஷத்துடன் திருப்த்தியாக வெளிவருகின்றனர்! உண்மையான திருஷ்யம், படத்தில் மட்டுமல்ல, அதைவிட அதிகமாக, ரசிகனின் மனதில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது!
  34.  
  35. இப்ப நம்ம தலைவனின் சாதனைகளுக்கு வருவோம்!!! ஏற்கனவே மலையாள த்ரிஷ்யம் பார்த்து ரசித்தவர்களுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால்..... சினிமா! சினிமாவின் முக்கியத்துவம் என்ன?! த்ரிஷ்யம்! காட்சி! ஒரு "த்ரிஷ்யம்" கண்டவருக்கு மற்றொன்று அது போல் மனதில் பதிவதில்லை! ஆனால் கமல், படம் தயாரிப்பிலிருக்கும்போதே சொன்னார், 'நிச்சயம் மோகன்லாலில் த்ரிஷ்யமும் என்னுடைய பாபநாசமும் வெவ்வேறாகத்தான் இருக்கும்' என! சொன்னதுபோல், வெற்றிகரமாக, he just ReCreated that Movie and made it a SuperHit!
  36.  
  37. இதற்கு முன்பும் பல ரீமேக்கள் தமிழில் நிறைய வந்துள்ளன! அவை பற்றி முழுதாக ஒரு ஜெனரல் ஸ்டேட்மெண்ட் சொல்லிவிடமுடியாது. ஆனால், நிச்சயம், ஒரு படத்தை, அதன் core ஐயும் மாற்றாமல், அதே கதையை அதே ஜீவனுடனும் படமாக்கி, அதே சமயம், அதில் சிலபல புது விஷயங்களையும் சேர்த்து, அந்த புதிய விஷயங்களும் சேர்த்தே மக்களால் பாராட்டப்பட்டு அந்தப்படம் பெருவெற்றி பெறுவது, நிச்சயம் சாதாரண காரியமே அல்ல, என நிச்சயம் சொல்லலாம்! அந்தவகையில், உலகநாயகன், just Recreated that Success Superbly! PapaNasam is BOTH a ReMake and a NewMake! Only you fossible Thalaivaa!!!!
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement