Advertisement
BalaramanL

செக்யூரிட்டி செக்

May 3rd, 2012
279
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.94 KB | None | 0 0
  1. 'உடன்பிறப்புகளே' குறும்படம் படப்பிடிப்புக்கான வேலைகள்ல நான் ஈடுபட்டிருந்தப்ப நடந்த ஒரு நிகழ்வு இது!
  2.  
  3. இறுதிக்காட்சி எடுக்குறதுக்கு ஒரு ஆடம்பரமான அறை தேவைப்பட்டுச்சு. பெங்களூர்ல ஒரு புகழ் பெற்ற பெரிய அங்காடில வச்சு அத எடுக்கலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். அந்த அங்காடில ஒரு ஆள்நடமாட்டம் அவ்வளவா இல்லாத எடம் ஒன்னு ஒத்துவரும்னு தோணுச்சு(ஏன்னா அவிங்கக்கிட்ட போய் பெர்மிசன் வாங்கணும்னா நிறைய கமிசன் கொடுக்கணும்!)! அதனால படப்பிடிப்புக்கு இரண்டுநாள் முன்னாடி அந்த எடத்துக்குப் போய் ஒரு தடவ பாத்துட்டு வந்திருவோம்னு நான் மட்டும் தனியா போனேன்.
  4.  
  5. இதுவரைக்கு நான் பண்ணதுல எதுவும் தப்பில்ல. ஆனா, போகும்போது பைல 'துப்பாக்கி'யோட போனா சும்மா விடுவாய்ங்களா?!(அட, அது 'டம்மி' துப்பாக்கின்னு நமக்குதானே தெரியும்?! :)))) ஆமா, அன்னைக்கு மறந்தாப்புல 'டம்மி' துப்பாக்கிய பைல வச்சுக்குட்டே அங்க போய்ட்டேன். இதுல என்ன வேடிக்கைன்னா அந்தப் பைக்குள்ள அந்தத் துப்பாக்கி மட்டும் தான் இருந்துச்சு, அடுத்த 'ஜிப்'ல ஒரு கொடை இருந்துச்சு, அவ்வளவு தான். அதுபோக அன்னைக்கு 5 சென்டிமீட்டர் தாடியோட பாக்க பக்கா தீவிரவாதி மாதிரியே இருந்தேன்!
  6.  
  7. நுழைவுவாயில்ல 'செக்யூரிட்டி செக்' பண்ணும்போதுதான் பைக்குள்ள துப்பாக்கி இருக்குங்கறது எனக்கு ஞாபகம் வந்துச்சு! அப்போதைக்கு அங்க கூட்டமே இல்ல. நான் ஒருத்தன் மட்டும் தான் நின்னுட்டிருந்தேன். அதனால, அவங்களுக்கு அவசரம் இல்ல. நிதானமா 'செக்' பண்ணாங்க! என் கண்ணு முன்னாடி ரெண்டு பேரு கைல 'ஒரிஜினல்' துப்பாக்கியோட நின்னுட்டிருந்தாய்ங்க(அதாங்க செக்யூரிட்டி!) "அவன்கிட்ட ஹிந்தி'ல எப்படி உண்மைய புரியவைக்கிறது?"ன்னு சின்ன வயசுல மனப்பாடம் பண்ணத மனசுக்குள்ள ஒப்பிச்சு பாத்துட்டு இருந்தேன்.
  8.  
  9. நான் பயந்த மாதிரியே அந்த செக்யூரிட்டி துப்பாக்கி இருக்க ஜிப்ப திறந்தான். அந்தத் துப்பாக்கி ஒரு டப்பாக்குள்ள வச்சு வச்சிருந்தேன். அந்த டப்பாவ வெளிய எடுத்தான். டப்பாவ அப்பிடி இப்பிடின்னு திருப்பிப் பாத்தான். அப்படியே பைக்குள்ள வச்சான். பின்னாடி ஜிப்ப திறந்தான். அந்தக் கொடையையும் ரெண்டு நிமிஷம் உத்துப் பாத்தான். உள்ள வச்சுட்டு விட்டுட்டான்!!!
  10.  
  11. "அப்பாடா, தப்பிச்சுட்டோம்"னு நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு உள்ள வந்தேன். அப்பறம் தான் நல்லா யோசிச்சு பாத்தேன். உண்மைலையே நான் தப்பிக்கல, மாட்டியிருக்கேன். ஒருவேள உண்மையான துப்பாக்கியையே ஒருத்தன் இப்படி டப்பாக்குள்ள வச்சுட்டு வந்திருந்தாலும் அந்த செக்யூரிட்டி இப்படி உள்ள விட்டிருப்பான்!!! அட, அப்ப நமக்கு இந்த ஊர்ல செக்யூரிட்டியே கிடையாதா??!!
  12.  
  13. பின்குறிப்பு: அந்தக் காட்சிய அதுக்கப்பறம் நண்பர் வீட்டுல வச்சே எடுத்துட்டோம். :)))
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement