BalaramanL

மீசை வரலாறு

May 4th, 2012
121
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
 1. 'உடன்பிறப்புகளே' குறும்படம் எனக்கு நிறைய அனுபவங்கள தந்துச்சு. அத கொஞ்ச கொஞ்சமா இது மாதிரி பகிரலாம்னு ஒரு முடிவு பண்ணியிருக்கேன். மொத்தமா அத பதிவுல போட்டா நீங்க கோரசா கொட்டாவி விட வாய்ப்பிருக்கு.
 2.  
 3. படத்தோட முதல் காட்சிக்கு வெளியூர் போய் படப்பிடிப்பு பண்ணத் தேவையிருந்துச்சு(அதாங்க outdoor shooting)! சிவராத்திரி அன்னைக்கு 'சித்தகங்கா'ன்னு ஒரு எடத்துல ஒரே கொண்டாட்ட கும்மாளமா இருக்கும்னு என் நண்பரோட(சந்தோஷ்) நண்பர் மூலமா தெரியவந்துச்சு. சிவராத்திரிக்கு முந்துன நாள் தான் plan போட்டோம். காட்சில நடிக்க வேண்டிய நாலு பேருக்கும் எத்தன மணிக்கு எங்க வரணும்னு சொல்லிட்டு, நானும் என் நண்பன் சரவணாவும்(ஒளிப்பதிவாளன்) அம்புலி-3D போயிட்டோம்.
 4.  
 5. அம்புட்டு தூரம் எப்படி போறது? நம்ம டி.பி.கே.டி அண்ணன் கார்ல தான்(நன்றி அண்ணே! :))). காலைல 6 மணிக்கெல்லாம் எல்லாரும் நாங்க முடிவு பண்ண எடத்துல ஒன்னுகூடிட்டோம். அதுக்கப்பறம் அவர் கார்ல பயணம் தொடர்ந்துச்சு. காலை டிபன், காப்பி டீ, இளையராஜா பாடல், காரசாரமான விவாதங்கள்ன்னு பயணம் நல்லாப் போச்சு. எல்லா checkpostலையும் சில்லரைப்பாக்கிக்கு ஒரு முட்டாய் கொடுத்தாயங்க! கடுப்பேறுன நம்ம டி.பி.கே.டி அண்ணன் அடுத்து வந்த checkpostல சில்லறைக்கு பதிலா அந்த முட்டாய அவருக்குக் கொடுத்தாரு பாருங்க... செம... :)
 6.  
 7. 'சித்தகங்கா' போய் சேந்துட்டோம். அது அருமையான எடமா இருந்துச்சு. மக்கள் நடமாட்டம் நிறையா இருந்துச்சு(நன்றி ஹரிஷ்). அவங்களுக்கு நடுவுல நம்ம டி.பி.கே.டி அண்ணன நடிக்க வச்சேன்! :) அப்பறம் அந்த ஊர்லையே ஒரு பெரிய மாணவர் விடுதி இருந்துச்சு. அங்கயும் போய் எடுத்தோம். அந்த ஊரு பசங்க என்னம்மா கில்லி விளையாடுரானுங்க?! அந்தக் காட்சி கொஞ்சம் சீரியசானதா இருந்தாலும், படப்பிடிப்பு செம்ம காமடியா போச்சு(யோவ் கஃபிலு, உன்னைய நான் கவனிச்சுக்குறேன்! ;)). ஹான்டிகேம் சார்ஜ் தீர்றதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி படப்பிடிப்பு முடிஞ்சுச்சு(ஒளிப்பதிவாளன பாராட்டியே ஆகணும், என்ன ஒரு கணிப்பு?!). ரிடர்ன் வரும் போது KFC'க்கே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டில போயி டி.பி.கே.டி அண்ணன் புரட்சி போராட்டம் பண்ணாரு! ;>
 8.  
 9. திரும்ப வந்ததுல இருந்து ஒரு வாரம் எனக்கும், சரவணாவுக்கும் முதுகு வலி. என்னன்னே தெரியல. அந்த வாரயிறுதி அவன் ஊருக்கு போயிட்டான். நான் பெங்களூர்ல எங்க வீட்ல தனியா இருந்தேன். எங்க வீட்டு மொட்டமாடில நின்னுட்டு 'பருந்து'(துண்டுப்படத்துல பாத்திருப்பீங்க!),'புறா' எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டு இருந்தேன். எனக்கு அன்னைக்கு காய்ச்சலா இருந்துச்சு. எதுவுமே பண்ண முடியல. "டே... எனக்கு chickenpox டா! :("ன்னு சரவணா எனக்கு குறுந்தகவல் அனுப்புனான். லேசா எனக்கும் சந்தேகம் வந்துச்சு. சட்டைய கழட்டிப் பாத்தா, எனக்கும் வந்திருக்கு(நண்பேன்டா!)!
 10.  
 11. ரெண்டு நாளு நானே காஞ்சி வச்சு அத நானே குடிக்கவேண்டிய கஷ்டம் இருந்துச்சே... :) அப்பறம் தாங்கமுடியாம மதுரைக்கே போயிட்டேன். மூணுவாரம் என்னைய எவ்வளவு கஷ்டப்படுத்த முடியுமோ, அவ்வளோ படுத்திருச்சு(நண்பன் சரவணா தெளிவா மாத்திரை எடுத்துக்கிட்டான்! :))! அந்த கேப்'லையும் 'கொசுக்கடி'ன்னு ஒரு சிறுகதை எழுதுனேன்(சரி.. சரி... அழாதீங்க!). கொஞ்சம் நடக்குறதுக்கே தெம்பில்லாம இருந்தேன். பல டுவிட்டர் நண்பர்கள் தொடர்ந்து என் நலம் விசாரிச்சாங்க. நன்றி. 'கலைப்பொறியாளர்கள்' டீமும் பொறுமையா காத்திட்டு இருந்தாங்க.
 12.  
 13. பெங்களூருக்கு வந்து ஒரு வாரம் மட்டும் ரெஸ்ட் எடுத்தேன். அடுத்து உடனையே வேலைல இறங்கிட்டேன். ரெண்டாவது காட்சி எடுக்கும் போது மொகம் எல்லாம் தழும்பு, 5 செண்டிமீட்டருக்கு தாடி வேற(நடிச்சவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு எனக்கு தெரியும்! ;))!
 14.  
 15. பின்குறிப்பு: அதுக்கடுத்து கொஞ்ச நாள்ல அந்தத் தாடிய டிங்கரிங் பண்ணி 'ஹாக்கி பேட்' மீச வச்சு நடிச்சேன். :)
RAW Paste Data