Advertisement
Guest User

நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்) என்றால் என்ன?

a guest
Apr 19th, 2015
297
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 23.10 KB | None | 0 0
  1. நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்) என்றால் என்ன?
  2.  
  3. நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்) என்பது இணையத்தில் பயணிக்கும் அனைத்து தரவுகளையும் சம்மாக நட்த்துவதேயாகும். இதோ இந்த டேட்டா பேக்கெட்டுகள் போல். அதாவது நம்மைப் போன்ற பயனர்கள் தான் எந்தெந்த சாதனங்கள், மென்பொருட்கள், வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். இணையம் என்பது சுதந்திரமானதாக இருக்க வேண்டும். இணையத்தில் ஒரு பயனருக்கு எது வேலை செய்யும் செய்யாது என்பதை எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் தீர்மானிக்க உரிமையில்லை.
  4.  
  5. இதை நீங்கள் ஏன் கவனிக்க வேண்டும்?
  6.  
  7. நாள்பொழுதும் நீங்கள் தேடும் தகவல்கள், நண்பர்கள், குடும்பங்களோடு நினைத்த நொடியில் தொலைதூர தொடர்பு கொள்ள உதவும் இந்த அற்புதமான கட்டமைப்பு இப்போது தகர்க்கப்படும் அபாயத்தில் உள்ளது.
  8.  
  9. இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமானால்:
  10.  
  11. இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமத்துவமான இணைப்பு என்பது யார் அனுப்புகிறார், என்ன அனுப்புகிறார் அல்லது யார் அதைப் பெறுகிறார் என்று எந்தப் பாகுபாடுமின்றி செயல்படும் இணைப்பு. அனுப்புநரோ அல்லது பெறுநரோ அவரவர் சக்திக்கேற்ப எவ்வுளவு கட்டணம் செலுத்தி இணைய இணைப்பைப் பெற்றிருந்தாலும், எந்த மென்பொருள் கொண்டு தொடர்பு கொண்டாலும், அதை எந்த வடிவத்தில் அனுப்பினாலும் எந்தப் பாரபட்சமும் பாராமல் சமமாக நடத்துகிறது.
  12.  
  13. இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமானால்...
  14.  
  15. இணையத்தை ஒரு சாலைபோலக் அதில் இந்த டேட்டா பேக்கெட்டுகள் நகர்வது போலக் கற்பனைச்செய்துக் கொள்ளுங்கள். இந்தச் சாலையானது இணையத்தில் உள்ள ஒவ்வொரு கணினி, ஸ்மார்ட்ஃபோன் போன்ற சாதனங்களை இணைக்கும் சாலை. சாலைகளின் ஒவ்வொரு குறுக்குச் சந்திப்புகளிலும் ரூட்டர் எனப்படும் திசைவி நிறுவப்பட்டுள்ளது. அது டேட்டா பாக்கெட்டுகள் எந்தச் சாலையில் சென்றால் அதன் இலக்கை அடையும் என்று வழிகாட்டும். அந்த ரூட்டருக்கு அந்தச் சாலையில் யார் வருகிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் பார்க்க எப்படி இருக்கிறார்கள், எங்கே செல்கிறார்கள், இல்லை என்ன வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கவலையில்லை. அதைப் பொருத்த வரை அனைவரும் சமமே.
  16.  
  17. இவ்வாறு சமமாக இயங்கும் பட்சத்தில் என் நண்பர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்தத் தொடர்பைப் பெற்றிருந்தாலும் என்னால் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இணையத்தில் எந்த வலைத்தளத்தையும் பயன்படுத்த, வீடியோவைப் பார்க்க, வலைப்பதிவைப் படிக்க, இணையம் மூலம் கூட்டாகச் சேர்ந்து கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் செய்ய டேப்லட், ஸ்மார்ட்ஃபோன், மடிக்கணினியென எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தி எந்தத் தடையுமின்றி செய்ய இயலும்.
  18.  
  19. இணையம் இப்படி இருக்கத்தான் பயனர்களான நாம் விரும்புகிறோம்.
  20.  
  21. நாம் அனைவரும் ஒரே சமூகமாக அனைவரின் தகவலோடும், உதவியோடும் இந்த சமமான இணையம் மூலம் பயனடைகிறோம். இணையத்தில் எந்தத் தகவலையும் நாம் தேடிப் பெற, பயன்படுத்த இந்த கட்டமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது.
  22.  
  23. இப்படி நாம் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்வதன் மூலம், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் மட்டும் பில்லியன் கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
  24.  
  25. நெட் நியூட்ராலிட்டி (இணைய சமத்துவம்): அனைவருக்குமானது. சமமானது.
  26.  
  27. சரி, இப்போது அதற்கென்ன வந்தது?
  28.  
  29. இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இந்தக் கற்பனை செய்யப்பட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏறபடும் வாய்பு உள்ளதாகக் கூறுகிறது. அவர்களுடைய இந்த கூற்று முற்றிலும் பொய்யானது, ஏனென்றால் அவை உண்மையான சாலைகள்போல் நிலையான இல்லை. இந்த நிறுவனங்களுக்கு வன்பொருள் வழங்கும் நிறுவனங்களின் கூற்றுப் படி இன்னும் முழுமையாகக் கையாளப்படாத கொள்ளளவு அப்படியே கிடக்கிறது. அதோடு, இணையத்தில் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில் இணையத்தில் உள்ள தகவல் போக்குவரத்து என்பது நம்பமுடியாத அளவுக்கு மலிவான தொகையில் வழங்க முடியும் என்பதே.
  30.  
  31. இணைய சமத்துவத்தை குழிதோண்டி புதைப்பதே நிறுவனங்களின் இலக்கு.
  32.  
  33. இருந்தும் ஏன் இந்த இணைப்பு வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் இவ்வாறு கூறுகிறார்கள்?
  34.  
  35. இணையத்தின் மூலம் சமூக வலைதள நிறுவனங்கள், தேடுதள நிறுவனங்கள், வீடியோ சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்றவை கொள்ளை இலாபம் சம்பாதிப்பதைக் கண்டு பொறாமை கொண்டுள்ள இணைப்பு வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்களும் இலாபம் சம்பாதிக்க தங்கள் அதிகாரத்தை இணைப்பை வழங்குவதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் பயன்படுத்தி இணையத்தில் உள்ள நாம் விரும்புகிற இந்தச் சமத்துவத்தை அழிக்க நினைக்கின்றனர்.
  36.  
  37. அதை அவர்கள் எப்படி அடைய முயற்சிக்கிறார்கள்?
  38.  
  39. இதை சாத்தியப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் முதலில் தகவல்களை பல வகைகளாகப் பிரிக்கிறார்கள், பல சாதிகளைப் போல். இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணைய முறை என்பது அடிமட்ட சாதியாக ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் உயர்ந்த சாதி தகவல்கள் செல்வதற்கு வழிவிட்டு நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரே இவை செல்ல இயலும்.
  40.  
  41. உயர்ந்த சாதியைச் சேர்ந்த தகவல்கள் தனித்துவம் பெறுவதற்காக இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் அதனை வழக்கமான இணைப்பிலிருந்து தனிமைப்படுத்தி சிறப்பந்தஸ்து வழங்கி அதனை கூடுதல் சந்தா மூலம் பெறுமாறு செய்யும்.
  42.  
  43. உதாரணத்திற்கு, சமூக வலைத்தளத்தைச் சேர்ந்த ஓர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த தகவலானது சாலையைக் கடக்க கட்டணம் செலுத்த வேண்டுமாயின், அதன் பெறுநர் கூடுதல் சந்தா செலுத்த வேண்டிருக்கும். இதே போல இணையத்தில் செய்திகள் படிக்க, குறிப்பிட்ட விளையாட்டு விளையாட என்று கூடுதல் சந்தா நிர்ணயிக்கக்கூடும் அபாயம் உள்ளது. இணைய இணைப்பு வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்தச் செயலால் தகவல் சேவை வழங்குபவர், அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளராகிய நாமும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதில் போட்டிகள் உருவாக்கப்படும். அதன் விளைவாகப் பல சேவைகளுக்கு உரிமம் மறுக்கப்படும்.
  44.  
  45. இது எப்படி செயல்படுத்தப்படுகிறது?
  46.  
  47. நாம் மறுபடியும் தகவல் தொடர்புகளைச் சாலைகள் போன்று கற்பனை செய்துக்கொள்வோம். முன்பு தகவல் பாகெட்டுகளை சரியான திசையில் திருப்பிவிட்ட ரூட்டர்கள், இப்போது மேம்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகளாகச் செயல்பட துவங்கி அதின் வழியாக வரும் தகவல்களைச் சாதிவாரியாகப் பிரிக்கிறது. அது எந்தச் சாதியைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்து பிரதான சாலையிலிருந்து பிரிந்து அதெற்கென வடிவமைக்கப்பட்ட சாலையில் பயணிக்க வைக்கப்படும். தாழ்ந்த சாதியைச் சேர்ந்த தகவலாக இருந்தால் அது மெதுவாகச் செல்லும் சாலையில் தள்ளப்படும்.
  48.  
  49. ஒரு வேளை கட்டணம் செலுத்தவில்லையெனில் அந்த தகவல் தாழ்ந்த சாதியில் சேர்க்கப்பட்டு, அந்தச் சாலை காலியாக இருந்தாலோ அல்லது மிகவும் குறைவான பாக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் எதுவாக இருந்தாலும் தடை செய்யப்படும்.
  50.  
  51. அப்படியும் இது தெளிவாக இல்லை என்றால், வாடிக்கையாளர்களாகிய நாம் இணைய சேவைக்கு எப்படியும் கட்டணம் செலுத்துகிறோம், தொலைதொடர்பு நிறுவனங்கள் இது போன்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து மேலும் மேலும் சுரண்டக் கூடும்.
  52.  
  53. இதனால், இலாப நோக்கமில்லாமல் செயல்படும் விக்கிபீடியா போன்ற அறிவை பொதுவுடைமயாக சிறந்த கொள்கைகளைக் கொண்ட தளங்கள் பலவும் இலவசமாக இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களின் இச்செயலால், மக்கள் கட்டணம் செலுத்த நேரிடலாம். நண்பர்களோடும், உறவினர்களோடும் நாம் மேற்கொள்ளும் தொடர்புகள் இந்நிறுவனங்களின் செயல்களால் தாமதமாகலாம்.
  54.  
  55. இப்படியொரு கட்டமைப்பை அவர்கள் நிறுவி விட்டால் பின், நிறுவனங்களுக்குள் வளரும் போடிகளுக்கும், பொறாமைகளுக்கும் மக்களே இலக்காவார்கள். இணையத்தில் நாம் பதிவிடும் கருத்துக்கள், பலரைச் சென்றடையாமல் போகவும் வழிவகுக்கிறது. இது ஒரு ஒட்டுமொத்த நாட்டினுடைய அதிகாரத்தை இலாபத்திற்காக செயல்படும் ஒரு நிறுவனத்தின் கையில் ஒப்படைக்கும் செயலாகும்.
  56.  
  57. இது ஒருவேளை நிகழ்ந்து விட்டால், இதனை மாற்றுவது எளிதான காரியம் அல்ல. சமமான இணைய உலகில் தேவையில்லாமல் பல ஏற்றத்தாழ்வுகள் உருவாகும். ஜனநாயகத்தின் மையமான பலதரப்பட்ட கருத்துக்களை நாம் இணையத்தில் இழக்க நேரிடும்.
  58.  
  59. அனைத்தையும் உள்ளடக்கிய இணையமானது உடைந்து, பல பிரிவினைகள் கொண்ட பல இணையங்கள் உருவாகும். ஒவ்வொன்றிலும் ஒரே செய்தி வேறு விதமாக பரவும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு சேவையைப் பெறவும் தனிக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அனைவரையும் பிரித்து குழப்பும் வேலையை செய்ய உதவுகிறது.
  60.  
  61. தகவல் பெறும் உரிமையை, நிறுவனங்களின் இச்செயலால் இழக்க நேரிடும். அல்லது நிறுவனங்கள் நினைக்கும் தகவல்களை வெவ்வேறு மக்களை பார்க்க வைக்க சர்வாதிகாரத்தில் இது முடியும்.
  62.  
  63. ஆனால் இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாங்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டோம் என்று கூறுவர். எப்படி விலையேற்ற மாட்டோம் என்று சொல்லிவிட்டு, அவ்வப்போது சிறிது சிறிதாக ஏற்றுவது போல் தான் இது.
  64.  
  65. இணையத்தில் இடப்பற்றாக்குறை, தகவல் போக்குவரத்து நெரிசல் என்று அப்பட்டமாக பொய் கூறியவர்கள் தான் இந்நிறுவனங்கள்.
  66.  
  67. இப்படி பொய் கூறும் இவர்கள், இணையத்தை வேகமாக்கத் தான் நாங்கள் முயற்சிக்கிறோமே தவிர உங்கள் தகவல்களை பிரிக்கமாட்டோம், உளவு பார்க்கமாட்டோம் என்று கூறுவதை எப்படி நம்புவது? இவர்கள் கூறும் இந்த கட்டமைப்பைச் செயல்படுத்த தகவலை பிரிக்க வேண்டும், தகவலை பிரிக்க வேண்டுமானால் பார்க்க வேண்டும்.
  68.  
  69. எங்களோடு இணைந்து போராடுங்கள். உங்கள் நாட்டில் இணைய சமத்துவத்தை பாதுகாத்திட.
  70.  
  71. அனைத்து தரவுகளையும் சமமாக நடத்துமாறு உரக்கச் சொல்லுங்கள்!
  72.  
  73. சிலவற்றை இலவசமாகவும், சிலவற்றிக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதையும், நம் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதையும் எதிர்த்துப் போராடுங்கள்.
  74.  
  75. இலாபத்திற்காக இணையத்தை பிரித்து, செயற்க்கையாக போடப்படும் வேகத் தடைகளை தகர்த்தெரிய எழுந்து வாருங்கள்.
  76.  
  77. ஒட்டுமொத்த மக்களும் சமூகமாக பயன்பெறும் கட்டற்ற சுதந்திரம் கொண்ட இந்த இணையத்தைப் பாதுகாத்திட போராடுங்கள்!
  78.  
  79. காரணம் எதுவாயினும், ஏற்றத்தாவுகளை அனுமதிக்கக் கூடாது. பாகுபாடுகளை அனுமதிக்கக் கூடாது.
  80.  
  81. நம்முடைய தகவல்களை துருவிப் பார்க்க யாருக்கும் உரிமையில்லை. அதை நியாயப்படுத்தவும் முடியாது. அனைத்தும் இயற்க்கையில் சமமே!
  82.  
  83. அதுவே சரியான பாதையாகும். இப்பொழுதும்! எப்பொழுதும்!
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement